மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
1263 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
1263 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
1263 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
1263 days ago
இந்தியாவையே பரபரப்புக்கு உள்ளாக்கிய காஷ்மீர் பைல்ஸ் படத்தை இயக்கிய விவேக் அக்னிஹோத்ரி அடுத்து டில்லி பைல்ஸ் என்ற தலைப்பில் படம் இயக்கப்போவதாக அறிவித்திருக்கிறார். இந்த படத்தில் அவர் தமிழ்நாடு பற்றிய உண்மைகளும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:
டில்லி பைல்ஸ் கதையில் முகலாயர்கள் ஆட்சி தொடங்கி ஆங்கிலேயர் ஆட்சி வரை டில்லியை எப்படியெல்லாம் அழித்தார்கள் என்பது குறித்து படத்தின் கதைக்களம் அமையும். பெரிய அளவிலான இந்து நாகரீகம் எப்போதும் புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கிறது. இது வெறும் டில்லியை பற்றிய படம் மட்டுமல்ல அதோடு தொடர்புடைய மற்ற உண்மைகளும் இடம்பெறும். குறிப்பாக தமிழ்நாட்டின் பல உண்மைகளை சொல்லும்.
இந்துக்களாகிய நாம் பலவீனமானவர்கள் என்று நம்ப வைக்கப்பட்டிருக்கிறோம். மேற்கத்திய ஆட்சியாளர்களிடமிருந்தும் அல்லது படையெடுப்பாளர்களிடமிருந்து தான் நாம் அனைத்தையும் கற்றுக்கொண்டோம் என்று மற்றவர்கள் சொல்வது முற்றிலும் தவறானவை. வரலாறு என்பது ஆதாரம் மற்றும் உண்மை சார்ந்ததாக இருக்க வேண்டும். கதைகளின் அடிப்படையில் இருக்கக்கூடாது. என்கிறார்.
1263 days ago
1263 days ago
1263 days ago
1263 days ago