சுதந்திர தினத்தில் டி.வியில் ஒளிபரப்பாகும் கோப்ரா?
ADDED : 1264 days ago
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து அடுத்து இயக்கி உள்ள படம் கோப்ரா. இதில் விக்ரம் பத்துக்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. விக்ரம் ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். இவர்களுடன் கே.எஸ்.ரவிகுமார், கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.
கொரோனா உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் தாமதமாகி வந்த இந்தப் படம் வருகிறது 26ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. இந்த நிலையில் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை அந்த சேனல் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று ஒளிபரப்ப திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.