'மா இன்டி பங்காரம்' படப்பிடிப்பு தளத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாடிய சமந்தா
ADDED : 184 days ago
நேற்று இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக சினிமா பிரபலங்கள் ஹோலி பண்டிகை கொண்டாடுவதில் ரொம்பவே ஆர்வம் காட்டி கலந்து கொண்டனர். அது குறித்த வீடியோக்கள், புகைப்படங்களையும் சோசியல் மீடியாக்களில் வெளியிட்டனர். இந்த நிலையில் நடிகை சமந்தா தற்போது தெலுங்கில் தான் நடித்து வரும் 'மா இன்டி பங்காரம்' என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
அதன் படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினருடன் ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்துள்ளார் சமந்தா. இது குறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன. இந்த படத்தை இயக்குனர் பி.வி நந்தினி ரெட்டி இயக்குகிறார். வரும் மே 15ம் தேதி இந்த படம் வெளியாவதாக திட்டமிடப்பட்டுள்ளது.