உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தேவிஸ்ரீ பிரசாத்துக்கு பதிலாக தமன் ; பவன் கல்யாண் படத்தின் இசையில் மாற்றம்

தேவிஸ்ரீ பிரசாத்துக்கு பதிலாக தமன் ; பவன் கல்யாண் படத்தின் இசையில் மாற்றம்


பவன் கல்யாண் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் 'உஸ்தாத் பகத்சிங்'. வரும் மார்ச் 27ம் தேதி வெளியாக இருக்கும் இந்த படம் வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ளது. இந்த படத்தை இயக்குனர் ஹரிஷ் சங்கர் இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து பாடல்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்ட நிலையில் தற்போது பின்னணி இசை அமைப்பதற்காக தமன் உள்ளே நுழைந்துள்ளார். இதனால் படக்குழுவினருக்கும் தேவிஸ்ரீ பிரசாத்திற்கும் ஏதாவது பிரச்னையா என்கிற விவாதம் கிளம்புவதற்கு முன்பாகவே தயாரிப்பாளர் தரப்பு இது குறித்து ஒரு விளக்கம் வெளியிட்டுள்ளது.

அதாவது, 'உஸ்தாத் பகத்சிங் படத்தை உருவாக்குவதில் கொஞ்சம் கால தாமதம் ஏற்பட்டதால் ஏற்கனவே இந்த படத்திற்காக தேவிஸ்ரீ பிரசாத் ஒதுக்கியிருந்த தேதிகளை எங்களால் பயன்படுத்த முடியவில்லை. அவருக்கும் வேறு வேறு படங்களில் பணியாற்ற வேண்டிய சூழல் இருப்பதால் அதை கருத்தில் கொண்டு ஒருவருக்கொருவர் பரஸ்பர புரிதலின் அடிப்படையில் தற்போது இந்த படத்தின் பின்னணி இசையை அமைப்பதற்காக தமனை ஒப்பந்தம் செய்துள்ளோம்' என்று கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !