யாருக்கு 'அட்வைஸ்' சொல்கிறார் சமந்தா
ADDED : 1306 days ago
சமூக வலைத்தளங்களில் அடிக்கடி விமர்சிக்கப்படுபவர் சமந்தா. அதற்கு அவரது தனிப்பட்ட வாழ்க்கை முக்கிய காரணமாக அமைந்துள்ளது. நாகசைதன்யாவைப் பிரிந்த பிறகு திடீர் திடீரென அவரை விமர்சிக்க ஒரு கூட்டம் கிளம்பி விடுகிறது. அவர்கள் நாகசைதன்யாவை எந்த விதத்திலும் விமர்சிப்பதில்லை.
இந்நிலையில் நேற்று மாலை திடீரென தத்துவார்த்தமாக ஒரு பதிவிட்டிருந்தார் சமந்தா. அதில், “என் மவுனத்தில் அறியாமைக்காக எப்போதும் தவறிழைக்காதே, என் அமைதி ஏற்றுக் கொள்வதற்கு, என் கருணை பலவீனத்திற்கு,” என்று குறிப்பிட்டிருந்தார். அடுத்து, “கருணைக்கு காலாவதி தேதி இருக்கலாம், சும்மா சொல்கிறேன்,” என பதிவிட்டிருந்தார்.
யாருக்கு, எதற்காக இப்படி சமந்தா பதிவிட்டுள்ளார் என்பது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.