விஷாலின் லத்தி படத்தின் படப்பிடிப்பு நிறைவு
ADDED : 1258 days ago
'வீரமே வாகை சூடும்' படத்திற்கு பிறகு விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லத்தி'. போலீஸ் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தை அறிமுக இயக்குனர் வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட நான்கு மொழியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்ததது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றுள்ளதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர் .