ஓடிடியில் வெளியாகிறது காஷ்மீர் பைல்ஸ்
ADDED : 1282 days ago
இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த படம் காஷ்மீர் பைல்ஸ். காஷ்மீரில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட காஷ்மீர் பண்டிட்களின் உண்மை கதை. இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாராட்டிய படம். பல மாநில அரசுகள் இப்படத்திற்கு வரிவிலக்கு கொடுத்தது. 15 கோடி ரூபாயில் உருவான படம் சுமார் 400 கோடி வசூலித்து சாதனை படைத்தது. விவேக் அக்னிஹோத்ரி இயக்கி இருந்தார்.
தியேட்டர்களில் வெளியாகி சாதனை படைத்த இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. ஜீ 5 ஓடிடி தளத்தில் வருகிற மே மாதம் 13ம் தேதி வெளிவருகிறது. ஹிந்தியில் தயாரான இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் வெளியாகிறது.