அம்மு அபிராமி - புகழ் நடிக்கும் “பாலமுருகனின் குதூகலம்”
ADDED : 1388 days ago
இயக்குனர் துரை செந்தில்குமாரின் இணை இயக்குனரான உலகநாதன் சந்திரசேகரன் இயக்கும் படம் “பாலமுருகனின் குதூகலம்”. முழுக்க முழுக்க காதல் கலந்த நகைச்சுவை திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் அறிமுக நடிகர் பால முருகன் கதாநாயகனாக நடிக்கிறார் .
அம்மு அபிராமி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் “குக் வித் கோமாளி” புகழ், பிஜார்ன் சுர்ராவ், சன்சீவி கோ சுவாமி, கவிதா பாரதி, டிஎஸ்ஆர், அனிஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு திருப்பூரில் இன்று துவங்கியது.