மேலும் செய்திகள்
சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி'
1220 days ago
மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம்
1220 days ago
குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி'
1220 days ago
லண்டனை சேர்ந்த மாடல் அழகியான எமி ஜாக்சன் மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்தார். இங்கு சினிமா வாய்ப்புகள் குறைந்த பிறகு லண்டனுக்கு சென்று செட்டிலானார். அங்கு வெப் தொடர்களில் நடித்து வந்தார்.
பாலிவுட் நடிகர் பிரதீக் பாப்பரை காதலித்தார். அவருடன் லிவிங் டு கெதராக வாழ்ந்தார். பின்னர் அவரிடமிருந்து பிரிந்து லண்டனை சேர்ந்த தொழில் அதிபர் ஜார்ஜ் பனயூட்டுவை காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து நிச்சயதார்த்தமும் செய்து கொண்டனர். திருமணத்துக்கு முன்பே ஒரு ஆண் குழந்தையையும் பெற்றெடுத்தார் எமி ஜாக்சன். அதன் பிறகு ஜார்ஜையும் பிரிந்தார் எமி.
இந்த நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த தொலைக்காட்சி நடிகரான எட் வெஸ்ட்டிக்கும் எமி ஜாக்சனும் காதலிப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியானது. இருவரும் ஜோடியாக திரியும் படங்களும் வெளியானது. தற்போது இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
1220 days ago
1220 days ago
1220 days ago