வெளியானது 'விருமன்' படத்தில் முதல் பாடல் புரோமோ வீடியோ
ADDED : 1377 days ago
கொம்பன் படத்திற்கு பிறகு இயக்குனர் முத்தையா இயக்கத்தில் மீண்டும் கார்த்தி நடித்துள்ள படம் 'விருமன்'. இப்படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் பிரகாஷ் ராஜ், சூரி, ராஜ்கிரண், கருணாஸ், மனோஜ் பாரதிராஜா ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா இப்படத்தை தயாரிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில் விரைவில் வெளியாகவுள்ள இந்த படத்தின் முதல் பாடலான 'கஞ்ச பூவு கண்ணால' என்ற பாடலின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.