மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
1215 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
1215 days ago
பாலிவுட்டின் முக்கியமான நடிகர்களில் ஆமீர்கானும் ஒருவர். அவர் 1986ம் ஆண்டு ரீனா தத்தாவைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரா கான் என்ற மகள், ஜுனைத் கான் என்ற மகன் உள்ளனர். திருமணமாகி 16 வருடங்களுக்குப் பிறகு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.
இரா கான் நேற்று தன்னுடைய 25வது பிறந்தநாளைக் கொண்டாடினார். ஒரு பக்கம் தனது காதலர் மற்றொரு பக்கம் தனது பெற்றோருடன் அவர் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். அவை நீச்சல் குள பிறந்தநாள் கொண்டாட்டங்களாகத்தான் இருந்துள்ளது.
நீச்சல் உடையில் இரா கான் கேக் வெட்ட ஆமீர் கான், ரீனா தத்தா உடனிருந்துள்ளனர். கூடவே ஆமீர் கானின் இரண்டாவது மனைவி கிரண் ராவின் மகன் ஆசாத்தும் உடனிருந்தார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலகப் பரவி வருகின்றன. முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஆமீர்கானின் மகள் இப்படி நீச்சல் உடையில் பிறந்த நாள் கொண்டாடுவது சரியா என சிலர் விமர்சித்துள்ளனர்.
1215 days ago
1215 days ago