ஆளே மாறிப்போன வீஜே பாரு
ADDED : 1256 days ago
வீஜே பார்வதி, யூ-டியூப் நிகழ்ச்சிகளில் அடல்ட் கண்டண்ட்களை பேசி பிரபலமானவர். தொடர்ந்து சின்னத்திரையில் ஜீ தமிழின் 'சர்வைவர்' நிகழ்ச்சியின் கலந்து கொண்டதன் மூலம் அதிக கவனத்தை ஈர்த்தார். தற்போது இவருக்கு சினிமா வாய்ப்புகள் தேடி வருகின்றன. சமூகவலைதளத்தில் தாறுமாறாக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். ஒருபுறம் பார்வதியை மோசமாக விமர்சிக்கும் கூட்டம் இருந்தாலும், அதையெல்லாம் தூசி என தட்டிவிட்டு தொடர்ந்து எதிர்நீச்சல் போட்டு தனது கேரியரில் முன்னேறி வருகிறார். தற்போது அழகான லெஹங்கா உடையில் போட்டோஷூட்டிற்காக போஸ் கொடுக்கும் ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதை பார்த்துவிட்டு அவரது ரசிகர்கள் 'திவ்ய பாரதிக்கே டப் கொடுக்குறீங்க பாரு' என கமெண்ட் அடித்து வருகின்றனர்.