லாஸ்லியாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்
ADDED : 1284 days ago
இலங்கையை சேர்ந்த லாஸ்லியா மரியநேசன், தமிழ்நாட்டில் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தார். இதனையடுத்து அவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. ஆரம்பத்தில் ஹோம்லியாக இருந்த லாஸ்லியா சினிமா வாய்ப்புகளாலும் மாடலிங் வாய்ப்புகளாலும் ஆளே மாறிப்போய்விட்டார். உடல் எடையை குறைத்து ஒல்லியானதுடன் விதவிதமான காஸ்ட்யூம்களில் கவர்ச்சியும் காட்டி வருகிறார். தற்போது வெள்ளை நிற உடையில் தேவதை போல் ஜொலிக்கும் தனது புகைப்படங்களை லாஸ்லியா வெளியிட்டுள்ளார். அந்த க்யூட்டான புகைப்படங்களை பார்த்துவிட்டு பலரும் லாஸ்லியாவுக்கு ஹார்டின் கொடுத்து வருகின்றனர்.