மேலும் செய்திகள்
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1234 days ago
நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர்
1234 days ago
இன்றைய ஓடிடி யுகத்தில் தியேட்டர்களில் வெளியாகும் ஒரு படம் நான்கு வாரங்களுக்குள்ளாகவே ஓடிடி தளங்களில் வெளியாகின்றன. அதனால், தியேட்டர்களில் வெளியாகும் படங்களைக் கூட கொஞ்சம் பொறுமையாகக் காத்திருந்து ஓடிடியில் பார்த்துக் கொள்கின்றனர்.
இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் ஒரு டப்பிங் படம் தமிழகத்தில் தியேட்டர்களில் வெளியாகி நான்கு வாரங்களுக்கும் மேலாக இன்னமும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருப்பது ஆச்சரியம்தான். அந்தப் பெருமையை 'கேஜிஎப் 2' படம் பெற்றுள்ளது. படத்தில் கேஜிஎப்பின் 'டான்' ஆக ராக்கி பாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யஷ் தமிழ் ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றுவிட்டார்.
அப்படத்துடன் வெளிவந்த 'பீஸ்ட்' படம் கூட கடந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகிவிட்டது. விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில தியேட்டர்களில் மட்டும் ஓரிரு காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்குப் பிறகு வந்த பல நேரடி தமிழ்ப் படங்கள் ஓரிரு நாட்களில் தியேட்டர்களை விட்டு தூக்கப்பட்டுவிட்டன. கடந்த வாரம் சிவகார்த்திகேயன் நடித்த 'டான்' படம் கூட வெளிவந்தது. எத்தனை 'டான்'கள் வந்தாலும் 'கேஜிஎப் டான் ராக்கி பாய்' இன்னமும் அசைக்க முடியாத டானாகவே இருக்கிறார். தமிழகத்தில் மட்டும் 125 கோடி வசூலைக் கடந்திருக்கும் என்கிறார்கள்.
கோடை விடுமுறை ஆரம்பமாகியுள்ளதாலும், இன்னமும் ஓடிடி வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்பதாலும் இந்த வாரமும் 'கேஜிஎப் 2' தாக்குப்பிடிக்கும் என்றே கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
1234 days ago
1234 days ago