உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காமெடி நடிகர் விக்னேஷ்காந்த்திற்கு திருமணம்

காமெடி நடிகர் விக்னேஷ்காந்த்திற்கு திருமணம்

யு டியூப் சேனல் மூலம் புகழ்பெற்றவர் விக்னேஷ் காந்த். அதன் மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார். கார்த்தி நடித்த 'தேவ்', ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்த 'மீசையை முறுக்கு', ரியோ நடித்த 'நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா' உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் விக்னேஷ்காந்துக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். நிச்சயதார்த்த படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள விக்னேஷ்காந்த் நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்தது. திருமணத்துக்கு அனைவரையும் அழைப்பேன். திருமண தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

மணப்பெண் யார் என்பது பற்றி அவர் தெரிவிக்கவில்லை. நட்பு வட்டாரத்தில் விசாரித்த வகையில் உறவுக்கார பெண் என்று தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !