உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிம்புவுடன் திருமணம் செய்து வையுங்கள் - தர்ணா செய்த டிவி நடிகை!

சிம்புவுடன் திருமணம் செய்து வையுங்கள் - தர்ணா செய்த டிவி நடிகை!

ஈஸ்வரன் படத்தையடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு படம் வெற்றி பெற்றதையடுத்து தற்போது வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் உள்பட பல படங்களில் நடித்து வருகிறார் சிம்பு. இந்நிலையில் பல சீரியல்களில் நடித்து வரும் ஸ்ரீநிதி விஜய் என்ற நடிகை சில மாதங்கள் முன்பு சோசியல் மீடியாவில், எல்லோருக்கும் திருமணம் ஆகியிருக்கும். ஆனால் நானும் சிம்புவும் மட்டும் சிங்கிள் ஆகவே இருப்போம் என்று பதிவிட்டிருந்தார். அதற்கு ரசிகர்கள் பல கமெண்டுகளை கொடுத்து வந்தார்கள்.

இந்த நிலையில் சிம்புவின் வீட்டின் முன்பு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நடிகை ஸ்ரீநிதி விஜய் தர்ணா செய்திருக்கிறார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ள ஸ்ரீ நிதி விஜய், இத்தனை ஆண்டுகள் எனக்காக தான் நீங்கள் சிங்கிளாக இருந்தீர்கள் என்பதை நம்பவே முடியவில்லை. இன்னைக்கு தான் எனக்கு புரிந்தது. எல்லோரும் சிம்புவையும் என்னையும் சேர்த்து வையுங்கள் ப்ளீஸ் என்று ஸ்ரீநிதி விஜய் பதிவிட்டுள்ளார். உண்மையிலேயே சிம்புவை இவர் காதலிக்கிறாரா? இல்லை ஒரு பப்ளிசிட்டிக்காக இப்படி செய்து கொண்டிருக்கிறாரா? என்பது தெரியவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !