மாமன்னன் படப்பிடிப்பில் இணைந்த பகத் பாசில்
ADDED : 1233 days ago
தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தை அறிமுகமான பகத் பாசில், தற்போது கமலின் விக்ரம் படத்தில் நடித்திருக்கிறார். அத்தையடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்து வரும் மாமன்னன் படத்திலும் நடிக்கிறார். இப்படத்தில் உதயநிதியுடன் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் உட்பட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் தற்போது பகத் பாசில் படபிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். முதல் நாள் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வந்தபோது அவரை இயக்குனர் மாரிசெல்வராஜ் மற்றும் படக்குழுவினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்று உள்ளார்கள்.