உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஷோரூம் திறப்பு விழாவில் அரசியல் பஞ்ச் டயலாக் பேசிய ரவி மோகன்!

ஷோரூம் திறப்பு விழாவில் அரசியல் பஞ்ச் டயலாக் பேசிய ரவி மோகன்!


‛பராசக்தி' படத்தை அடுத்து தற்போது ‛கராத்தே பாபு, ப்ரோ கோடு' போன்ற படங்களில் நடித்து வருவதோடு, யோகி பாபு நடிப்பில் ‛அன் ஆர்டினரி மேன்' என்ற படத்தை இயக்கி வருகிறார் ரவி மோகன். இதில் ‛ப்ரோ கோடு' படத்தின் தலைப்பு மட்டும் மாற்றப்படலாம். இந்நிலையில் இன்று தஞ்சாவூரில் மலபார் கோல்ட் என்ற ஷோரூமை திறந்து வைத்துள்ளார் ரவிமோகன். அப்போது அந்த மேடையில், தற்போது தான் நடித்து முடித்திருக்கும் கராத்தே பாபு படத்தில் இடம்பெற்றுள்ள, ‛மக்களை நம்பாதவர் மக்களை ஆள முடியாது. நீ தொழிலுக்காக அரசியல் பண்றவன், ஆனா நான் தொழிலையே அரசியலா பண்றவன்' போன்ற பஞ்ச் டயலாக்குகளை பேசியுள்ளார்.

அதைக்கேட்டு அங்கு கூறியிருந்த ரசிகர்கள் பலத்த கரகோஷம் எழுப்பி உள்ளார்கள். அதையடுத்து மீடியாக்களை சந்தித்த ரவி மோகன், ‛இங்கே நான் வந்ததுமே ரசிகர்கள் என்னை பார்த்து ராஜராஜ சோழன் என்று அழைத்தார்கள். அது மகிழ்ச்சியாக உள்ளது. பொன்னியின் செல்வன் படத்தில் ராஜராஜ சோழனாக நடித்தது பெருமையாக உள்ளது. அப்படிப்பட்ட ராஜராஜ சோழன் ஆண்ட இந்த மண்ணிற்கு வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது' என்று தெரிவித்திருக்கிறார் ரவி மோகன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !