உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / குட்டையான உடை அணிந்து குத்தாட்டம் போட்ட ஸ்ரீநீதி!

குட்டையான உடை அணிந்து குத்தாட்டம் போட்ட ஸ்ரீநீதி!

தமிழ் சின்னத்திரையில் நடித்து வரும் க்யூட்டான டீனேஜ் நடிகைகளில் ஒருவர் ஸ்ரீநிதி. இவர் முதன் முதலில் விஜய் டிவியில் வெளியான 7 சி தொடரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தற்போது தமிழின் முன்னணி சேனல்களில் பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இடையில் அஜித் நடித்த வலிமை படம் குறித்து விமர்சனம் தெரிவித்திருந்த ஸ்ரீநிதியை ரசிகர்கள் மிகவும் கேவலமான முறையில் சோஷியல் மீடியாக்களில் அப்யூஸ் செய்தனர். இதனால் மனமுடைந்த அவர் தொடர்ந்து சோகமான பதிவுகளை வெளியிட்டு வந்தார்.

சமீபத்தில் அவர் நடித்து வந்த 'நினைத்தாலே இனிக்கும்' தொடரை விட்டும் விலகினார். இந்நிலையில், சமூக வலைதளத்தில் அடிக்கடி பதிவுகளை போட்டு உசுப்பேற்றி வந்த ஸ்ரீநிதி, குட்டையான டிரவுசரை அணிந்து கொண்டு டிரெண்டிங் பாடலான 'புல்லட்' பாடலுக்கு நடனமாடியுள்ளார். அவர் கேஸூவலாக அந்த வீடியோவை வெளியிட்டிருந்தாலும், நெட்டிசன்களோ ஹாட்டாக இருக்கும் அந்த வீடியோவில் அவரது அழகை ரசித்து ஹார்டின் மழை பொழிந்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !