உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / யோகி பாபுவுடன் தமிழில் இணையும் மலையாள காமெடி நடிகர் : மலையாள இயக்குனர் இயக்குகிறார்

யோகி பாபுவுடன் தமிழில் இணையும் மலையாள காமெடி நடிகர் : மலையாள இயக்குனர் இயக்குகிறார்

தமிழில் நகைச்சுவை நடிகராகவும் சில படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களிலும் கதையின் நாயகனாகவும் மாறி மாறி பிசியான நடிகராக பயணித்து வருகிறார் யோகி பாபு. அவருக்கு மலையாளத்திலும் வரவேற்பு இருக்கிறது. பல இயக்குனர்கள் மலையாளத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் அவரை நடிக்க அழைக்கிறார்கள் அந்த வகையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான குருவாயூர் அம்பல நடையில் படத்தில் நடித்த யோகி பாபு ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் ஹரிவராசனம் என்கிற படத்திலும் நடித்துள்ளார். இந்த நிலையில் மலையாளத்தில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வரும் நடிகர் அஜூ வர்கீஸ் தமிழில் யோகி பாபுவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

ஏற்கனவே இவர் பறந்து போ படத்தில் அஞ்சலியின் கணவராகவும், பிரபுதேவா நடித்துள்ள மூன் வாக்கு படத்திலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது யோகி பாபுவுடன் இவர் இணைந்து நடிக்கும் படத்தை இயக்குனர் ஜோஜூ ஆலுக்காஸ் என்பவர் இயக்குகிறார். இவர் கடந்த 2019ல் மோகன்லால், ராதிகா நடிப்பில் மலையாளத்தில் வெளியான இட்டிமானி மேட் இன் சைனா படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2027 ஜனவரியில் தொடங்கும் இதன் படப்பிடிப்பு கஞ்சிக்கோடு, பொள்ளாச்சி, சென்னை மற்றும் மலேசியா ஆகிய இடங்களில் நடைபெற உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !