'பிசாசு' 2 படத்தின் டப்பிங்கை முடித்த விஜய் சேதுபதி
ADDED : 1442 days ago
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'பிசாசு' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. நடிகை ஆண்ட்ரியா கதாநாயகியாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் நமீதா கிருஷ்ணமூர்த்தி, பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 4 மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது . சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் விஜய் சேதுபதி இந்த படத்தின் டப்பிங் பணிகளை முடித்துள்ளதாக மிஷ்கின் அறிவித்துள்ளார்.