அமீர்கானை தொடர்ந்து சாய் பல்லவியை பாராட்டிய தனுஷ்
இயக்குனர் நிதேஷ் திவாரியின் ராமாயணா படத்தில், ரன்பீர் கபூர் ராமராக நடிக்க, சாய் பல்லவி சீதை கதாபாத்திரத்தில் நடித்திருப்பதை நடிகர் தனுஷ் வெகுவாக பாராட்டியுளளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் தனது அடுத்த படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், ‛‛மாரி -2 படப்பிடிப்பு தளத்தில் சாய் பல்லவியை முதன்முதலில் சந்தித்ததை நினைவு கூர்ந்தார். அப்போது சாய் பல்லவி மிகவும் அமைதியான, மென்மையாகப் பேசக்கூடிய ஒரு பெண்ணாகத் தெரிந்ததார். இருப்பினும், கடந்த ஒன்பது ஆண்டுகளில் சினிமாவில் கிடைத்த அனுபவத்தின் மூலம், ஓம் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தபோது சாய் பல்லவி அதிக தன்னம்பிக்கையுடனும், தனது நடிப்புத் திறனில் சிறந்து விளங்கினார்.
தனது பேச்சு, நடத்தை மற்றும் முகபாவனைகளில் அவர் அந்த அளவிற்கு நயத்தையும் தன்னம்பிக்கையையும் வெளிப்படுத்தினார். இந்த மாற்றம் தனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஓம் படத்தில் சுலபமில்லாத ஒரு கதாபாத்திரத்தை ஏற்று, சாய் பல்லவி மிகவும் தைரியமாக நடித்தார்.
ராமாயணா படத்தில் சாய் பல்லவி நடிப்பதைச் சுற்றி ஏன் இவ்வளவு எதிர்மறையான பேச்சுகள் உருவாகின்றன என்பது புரியவில்லை. படப்பிடிப்பின் போது கூட அவர் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பார். அந்த அளவிற்கு அவரிடம் பக்தியும் தூய்மையான மனமும் உள்ளது. அவர் மிகவும் அழகாகவும், மிகச்சிறந்த நடிகையாகவும் திகழ்கிறார். இந்தியா முழுவதிலும் தேடினாலும் கூட இப்படி ஒரு சீதையை உங்களால் கண்டுபிடிக்க முடியாது என்றார்.
இதற்கு ரசிகர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சமீபத்தில் அமீர்கானும் சாய் பல்லவியைப் பாராட்டி, அவரை இந்தியாவின் சிறந்த நடிகை என்று அழைத்தது குறிப்பிடத்தக்கது.