உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ஷங்கர் பட நாயகி

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ஷங்கர் பட நாயகி

டாக்டர், டான் படங்களின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள அயலான் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது . இதையடுத்து அனுதீப் இயக்கும் படத்திலும், ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் மற்றும் மண்டேலா இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கும் படத்திலும் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இதில், கமல் தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் இருபத்தி மூன்றாவது படத்தில் சாய்பல்லவி நாயகியாக நடிக்க, மடோன் அஸ்வின் இயக்க உள்ள படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிப்பதாக கூறப்படுகிறது. இவர் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்து வரும் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !