'வாஷி' டீசர் வெளியானது
ADDED : 1491 days ago
டொவினோ தாமஸ் மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் 'வாஷி' படத்தினை கீர்த்தி சுரேஷின் பள்ளி பருவ நண்பரான விஷ்ணு இயக்கி வருகிறார். கீர்த்தியின் அக்கா தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று. சமீபத்தில் நிறைவுபெற்றது. கைலாஷ் மேனன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்திற்கு நைய்ல் ஓ குன்ஹா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் இருவருமே வக்கீலாக நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் டீசர் நேற்று வெளியானது. இப்படம் வருகின்ற ஜூன் 17-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.