பாலகிருஷ்ணா படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
ADDED : 1248 days ago
ஒருங்கிணைந்த ஆந்திரவாக இருந்தபேது மூன்று முறை முதல்வர் பதவியை அலங்கரித்தவர் நடிகர் என்டிஆர். அவரின் நூற்றாண்டு விழா இந்தாண்டு முழுக்க கடைபிடிக்கப்படுகிறது. நேற்று முதல் இந்த நிகழ்வு துவங்கி உள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் அவரது வாரிசான நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகி வரும் 107வது புதிய படத்திலிருந்து புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில் பாலகிருஷ்ணா கையில் வாளுடன் இருக்கிறார். ஆக்ஷன் படமாக உருவாகி வரும் இந்த படத்தை இயக்குனர் கோபிசந்த் மாலினேனி இயக்குகிறார். இதில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார். எஸ்.தமன் இசையமைக்கிறார். உண்மைச் சம்பவங்களை மையமாக கொண்டு இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது .