அதர்வாவின் இதயம் முரளி படத்தில் பஹத் பாசில்
ADDED : 127 days ago
சுதா கொங்கரா இயக்கிய பராசக்தி படத்தில் நடித்த அதர்வா, அதையடுத்து தற்போது இதயம் முரளி என்ற படத்தில் நடித்து வருகிறார். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து, இயக்கும் இந்த காதல் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக பிரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் நிஹாரிகா, நடராஜன் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த நிலையில் இதயம் முரளி படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசிலும் ஒரு சிறப்பு வேடத்தில் நடிப்பதாக படக்குழு ஒரு வீடியோ மூலம் தெரிவித்துள்ளது. இப்படி பஹத் பாசில் இப்படத்தில் நடிப்பதாக செய்தி வெளியானதை அடுத்து இதயம் முரளி படம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற தொடங்கியுள்ளது.