உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பீட்சா பாய்ஸ் கதை என்ன? : புனேவை சேர்ந்த இயக்குனர் விளக்கம்

பீட்சா பாய்ஸ் கதை என்ன? : புனேவை சேர்ந்த இயக்குனர் விளக்கம்

சேகர் கேசவ் சிரின் இயக்கத்தில் சிவம் சங்கர், ஆல்பியா நடித்துள்ள படம் பீட்சா பாய்ஸ். சரத் லோஹிதாஸ்வா வில்லனாக நடிக்கிறார். படம் குறித்து இயக்குனர் கூறியதாவது, ‛‛நான் புனேவை சேர்ந்தவன், ஹீரோ, தயாரிப்பாளர் பெங்களூர். ஆனாலும், நாங்கள் தமிழர்கள், நன்றாக தமிழ் பேசுவோம். அதனால் இந்த கதையை பெங்களூர் பின்னணியில் எடுத்தோம். வில்லன் லோஹிதாஸ்வா பீட்சா உணவகத்தில் வேலை செய்யும் ஹீரோ, அதிலிருந்து வெளியேறுகிறார்.

நண்பர்கள் உதவியுடன், ரோட்டில் கடை நடத்தும் ஹீரோயின் ஆதரவுடன் பீட்சா கடை தொடங்குகிறார். அதை பக்கா லோக்கலாக, பல புதுமைகள் புகுத்துகிறார். அது மக்களிடம் வரவேற்பு பெறுகிறது. அதனால், வில்லன் பொங்க, வேறு ஒரு வழக்கில் ஹீரோ சிக்க என்ன நடக்கிறது என்பதை படத்தில் சொல்லியிருக்கிறோம். 4 நண்பர்களின் கதை இது என்றும் சொல்லலாம். 3 மாறுபட்ட கெட்அப்பில் ஹீரோ வருகிறார். அதற்காக 20 கிலோ எடையை அதிகரித்து, பின்னர் அதை குறைத்தார். நானே படத்துக்கு இசையமைத்துள்ளேன். என்ன புடுங்கப்போற என்ற பாடல் வெளியாகி உள்ளது. சென்சாரில் அந்த வார்த்தைக்கு இடம் இருக்காது. ஆகவே, அதை மாற்ற உள்ளோம். டிசம்பர் 4ல் படம் ரிலீஸ்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !