'மாத்ருபூமி' படக்குழுவிற்கு சுவிஸ் கடிகாரங்களைப் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த சல்மான் கான்
பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் 'மாத்ருபூமி'. கடந்த சில வருடங்களுக்கு முன்பு கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற இந்திய - சீன யுத்தத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்குநர் அபூர்வ லக்கியா இயக்கியுள்ளார். படம் முன்கூட்டியே தயாராகி விட்டாலும் பல தடைகளைத் தாண்டி தற்போது வரும் டிசம்பர் நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் தனது பண்ணை வீட்டிற்கு 'மாத்ருபூமி' படக் குழுவினரை வரவழைத்த சல்மான் கான், படத்தில் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு சுமார் 2 லட்சம் முதல் 6 லட்சம் வரை விலை மதிப்புள்ள சுவிஸ் கடிகாரங்களைப் பரிசளித்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். ஆண் மற்றும் பெண் கலைஞர்கள் என அவரவருக்கு ஏற்ற முறையில் தனிப்பட்ட வெவ்வேறு பிராண்டுகளில் இந்த சுவிஸ் கடிகாரங்களைப் பரிசாக வழங்கினார் சல்மான் கான்.