விக்ரமிற்கு 10 இடத்தில் வெட்டு
ADDED : 1270 days ago
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் நடித்துள்ள படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். வருகிற 3ம் தேதி படம் வெளியாகிறது. படத்திற்கு தணிக்கை குழு யுஏ சான்றிதழ் வழங்கி உள்ளது. என்றாலும் 10 இடத்தில் கத்தரி போட்டுள்ளது.
இதில் முக்கியமாக படத்தில் ஜிஎஸ்டி வரி குறித்து வரும் வசனங்கள் நீக்கப்பட்டுள்ளது. வன்முறை காட்சிகளின் நீளம் குறைக்கப்பட்டுள்ளது. ஆபாசத்தை குறிக்கும் விதமாக கமலின் பேசிய சில காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. டிரைலரில் விஜய்சேதுபதி ஒருவரை சரமாரியாக குத்தி கொல்வார் அந்த காட்சியின் நீளம் குறைக்கப்பட்டுள்ளது. இது தவிர ஆபாச மற்றும் தகாத வார்த்தைகள் மியூட் செய்யப்பட்டுள்ளது. மேலும் சில வன்முறை காட்சிகளும் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.