மிர்ச்சி சிவாவின் 'காசேதான் கடவுளடா ரிலீஸ் எப்போது?
ADDED : 1367 days ago
மிர்ச்சி சிவா மற்றும் யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'காசேதான் கடவுளடா' திரைப்படம் உருவாகி வருகிறது. 1972ம் ஆண்டு வெளியான நகைச்சுவை படமான 'காசேதான் கடவுளடா'வை இந்த காலத்திற்கு ஏற்றவாறு ரீமேக் செய்கின்றனர். இந்தப் படத்தை இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்குகிறார்.
நடிகை ப்ரியா ஆனந்த் நாயகியாக நடிக்கிறார். முக்கியக் கதாபாத்திரங்களில் கருணாகரன், ஊர்வசி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது ஜூன் 30ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது .