தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சமந்தா
ADDED : 1464 days ago
இந்தியாவில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் ஒளிப்பரப்பாகி வருகிறது.
தற்போது இந்த நிகழ்ச்சியை தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். தெலுங்கில் ஒளிப்பரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை நாகார்ஜூனா தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் விரைவில் துவங்கவுள்ளது.
இந்நிலையில் நாகார்ஜூனா படப்பிடிப்பு காரணமாக தெலுங்கில் ஒளிபரப்பாக இருக்கும் 6வது சீசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அவருக்கு பதிலாக நடிகை சமந்தா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளாராம். இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.