ரஜினியை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள்
ADDED : 1224 days ago
கடந்த 2019ம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் நடைபெற்றது. இதில் நாசர் தலைமையில் பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையில் சங்கரதாஸ் சுவாமிகள் அணியும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் ஓட்டுப்பதிவு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. அதில் விஷால் பாண்டவர் அணி வெற்றி பெற்றனர். நாசர் தலைவராகவும், விஷால் செயலாளராகவும், கார்த்தி பொருளாளராகவும் பொறுப்பேற்றுள்ளனர்.
இந்நிலையில் நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், கார்த்தி, பூச்சி முருகன் ஆகியோர் நடிகர் ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து பேசியுள்ளனர். நடிகர் சங்க கட்டடம் மற்றும் பல்வேறு விஷயங்களை அவருடன் பேசியுள்ளனர். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.