மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
1190 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
1190 days ago
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா நடித்து வரும் இந்த படத்தில் பிரியாமணி முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பதும், யோகி பாபு உள்பட ஓரிரு தமிழ் திரையுலகைச் சேர்ந்த நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.
இந்த படத்தின் டைட்டில் 'லயன்' என்று வைக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் தற்போது இந்த படத்திற்கு 'ஜவான்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த படத்தின் டீஸர் தயாராகி அதற்கான சென்சார் பணிகள் முடிவடைந்து விட்டதாகவும், அதில் இருந்து கசிந்த தகவலின் படி தான் இந்த படத்தின் டைட்டில் 'ஜவான்' என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து இந்த தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
'ஜவான்' படத்தை முடித்துவிட்டு இயக்குனர் அட்லி அடுத்ததாக விஜய் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது .
1190 days ago
1190 days ago