விஜய் 66 அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் இன்று துவக்கம்
ADDED : 1237 days ago
நடிகர் விஜய் தற்போது தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் படத்தில் நடிக்கிறார் . தில் ராஜு தயாரிக்கிறார் . விஜய்க்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் . முக்கிய கதாபாத்திரங்களில் சரத்குமார், ஷாம் , யோகிபாபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், சம்யுக்தா உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். சென்னையில் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடந்தது. சில நாட்கள் ஓய்வு கொடுத்த நிலையில் இன்று(ஜூன் 3) முதல் சென்னையில் விஜய் 66 படப்பிடிப்பு துவங்கி உள்ளது. தமன் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். குடும்ப சென்டிமென்ட் கலந்த முழு நீள கமர்ஷியல் படமாக இந்த படம் உருவாகிறது.