உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிம்புவின் கொரோனா குமார் கைவிடப்பட்டதா - உண்மை என்ன?

சிம்புவின் கொரோனா குமார் கைவிடப்பட்டதா - உண்மை என்ன?

சிம்பு தற்போது மாநாடு திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து பத்து தல படத்தில் நடிக்க தயாராகி வந்தார். இந்நிலையில் சிம்பு தந்தை டி.ராஜேந்தர் சமீபத்தில் உடல்நிலை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் சிம்புவின் பத்து தல இறுதிக்கட்ட படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

இதனிடையே சிம்பு நடிப்பில் உருவாக இருந்த கொரோனா குமார் திரைப்படம் கைவிடப்பட்டு இருப்பதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது . கொரோனா குமார் திரைப்படத்தில் சிம்பு உடன்பாடு இல்லாத காரணத்தினாலும், தயாரிப்பாளர் ஐசரி கணேஷும் அப்படத்தை கைவிட முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு பதிலாக இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் சிம்புவின் புதிய திரைப்படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியானது..

ஆனால் இதுபற்றி விசாரித்தபோது அப்படியெல்லாம் இல்லை. இவையெல்லாமே வதந்தி என்றும், முழுக்க, முழுக்க காமெடி டிராக்கில் உருவாக இருக்கும் இப்படம் உருவாகுவது உறுதி என்றும் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !