எஸ்.ஜே.சூர்யாவின் 'கடமையை செய்' ரிலீஸ் தேதி அறிவிப்பு
ADDED : 1232 days ago
எஸ்.ஜே.சூர்யா தற்போது ஹீரோவாகவும், வில்லனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் வெங்கட் ராகவன் இயக்கத்தில் 'கடமையை செய்' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். வினோத் ரத்னசாமி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு அருண்ராஜ் இசையமைத்துள்ளார்.
இப்படதில் நடிகை யாஷிகா ஆனந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் மொட்டை ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், இராஜசிம்மன், மோகன் வைத்யா, சேஷு, TSR, ராம்ஜி, ஜெயச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் 'ஸ்கூப்பர்' என்ற விநோத நோயால் பாதிக்கப்ட்ட நபராக எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். காமெடி, சென்டிமென்ட் கலந்து உருவாகி உள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகின்ற ஜூன் 24-ஆம் தேதி வெளியாகிறது.