உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' பட டீசர் நாளை மறுநாள் ரிலீஸ்

சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' பட டீசர் நாளை மறுநாள் ரிலீஸ்

தனுஷ் நடித்த வாத்தி, துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் படங்களை இயக்கிய வெங்கி அட்லுாரியின் அடுத்த படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். சூர்யா நடிக்கும் இந்த படத்தின் டீசர் நாளை மறுநாள் ரிலீஸ் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் சூர்யாவுடன் மமிதா பைஜூ, ராதிகா, பவானிஸ்ரீ உட்பட பலர் நடிக்கிறார்கள். கையில் சின்ன குழந்தையுடன் சூர்யா இருக்கும் பர்ஸ்ட் லுக் வைரல் ஆனது. அதை பார்த்தவர்கள் இது வித்தியாசமான கதை. விஸ்வநாத் என்பவரின் மகன் சூர்யா, கையில் இருக்கும் குழந்தை அவரின் தம்பி. அந்த குழந்தையை அவர் எப்படி வளர்க்கிறார் என்ற ரீதியில் எமோஷனலாக கதை நகர்கிறது என்று கதை விட்டார்கள். அது உண்மையா என்பது நாளை மறுநாள் டீசரில் தெரிந்துவிடும். சூர்யாவின் இளம் வயது காதலியாக மமிதா நடிக்கிறார். சூர்யாவின் அம்மாவாக யார் வருகிறார். அப்பா யார் என்பது சஸ்பென்ஸ் என்றும் கூறப்படுகிறது. தம்பி பாசம், குடும்ப சண்டை, சொத்து பிரச்னை உள்ளிட்ட விஷயங்களும் கதையில் இருக்கிறது என்று தகவல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !