உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ராஷ்மிகாவின் காக்டெய்ல் 2 படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது

ராஷ்மிகாவின் காக்டெய்ல் 2 படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது

ராஷ்மிகா மந்தனா கதையின் நாயகியாக நடித்த, ‛தி கேர்ள் பிரண்ட்' என்ற படம் கடந்த நவம்பர் 7ஆம் தேதி வெளியானது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் பாக்ஸ் ஆபீசில் தோல்வியை சந்தித்தது. அதை தொடர்ந்து ஹிந்தியில் காக்டெய்ல் 2, தெலுங்கில் மைசா, ரணபாலி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில், ஹிந்தியில் ஷாகித் கபூருடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள காக்டெய்ல் 2 என்ற படத்தின் டீசர் மார்ச் 18 ஆம் தேதி வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவித்த படக்குழு, தற்போது இந்த படத்தை வருகிற ஜூன் 19ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !