உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தெலுங்கானா டிக்கெட் கட்டண உயர்வு : தடையை நீக்கிய உச்சநீதிமன்றம்

தெலுங்கானா டிக்கெட் கட்டண உயர்வு : தடையை நீக்கிய உச்சநீதிமன்றம்


தெலுங்குத் திரையுலகத்தில் வெளியாகும் புதிய படங்களுக்கு தெலுங்கானா, ஆந்திர மாநில அரசுகள் டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்குவது வழக்கம். அதிகபட்சமாக பத்து நாட்கள் வரை அந்த கட்டண உயர்வு இருக்கும். தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் ஒருவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் அதில் சில மாற்றங்களைச் செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். படம் வெளியாவதற்கு 90 நாட்களுக்கு முன்பு விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று அந்த உத்தரவில் குறிப்பிட்டார்கள்.

இந்நிலையில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நடித்து மார்ச் 19ல் வெளிவர உள்ள 'உஸ்தாத் பகத்சிங்' படத்திற்கு ஆந்திர மாநில அரசு மட்டும் டிக்கெட் கட்டண உயர்வை அறிவித்தது. தெலுங்கானா உயர்நீதிமன்றத்தின் 90 நாட்கள் உத்தரவை எதிர்த்து இப்படத்தின் தயாரிப்பி நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தெலுங்கானா உயர்நீதிமன்றத்தின் 90 நாட்கள் உத்தரவிற்கு தடை விதித்துள்ளது. இதையடுத்து 'உஸ்தாத் பகத்சிங்' படத்திற்கு மட்டுமல்ல அடுத்த வர உள்ள படங்களுக்கும் இந்த உத்தரவு பெரும் ஆறுதலைத் தந்துள்ளது. அடுத்த சில நாட்களில் டிக்கெட் கட்டண உயர்வு குறித்து அரசு அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !