தெலுங்கில் பிசியாகும் நயன்தாரா சக்ரவர்த்தி
ADDED : 1264 days ago
நயன்தாரா திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாக இருக்கும் நேரத்தில் புதிதாக வந்திருக்கிறார் நயன்தாரா சக்ரவர்த்தி. 16 வருடங்களுக்கு முன்பு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானர். அதன் பிறகு 30 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்து விட்டார். சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதையும் ஏராளமாக பெற்றிருக்கிறார்.
இந்த நிலையில் கே.டி.குஞ்சுமோன் இயக்கும் ஜென்டில்மேன் 2 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஆனால் இந்த படம் தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதை தொடர்ந்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்துகிறார். இரண்டு படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. இதுபற்றிய முறையான அறிவிப்புகள் விரைவில் வெளிவர இருக்கிறது.