மேலும் செய்திகள்
மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ்
1187 days ago
லெவன் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட்
1187 days ago
பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா
1187 days ago
தமிழ் சினிமாவில் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு மற்றும் வெளியீட்டு நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் தொடர்ந்து முக்கியமான திரைப்படங்களை வாங்கி வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டில் இதுவரையில், “எப்ஐஆர், எதற்கும் துணிந்தவன், ராதே ஷ்யாம், பீஸ்ட், காத்துவாக்குல ரெண்டு காதல், டான், நெஞ்சுக்கு நீதி, விக்ரம்” ஆகிய படங்களை வெளியிட்டுள்ளது.
இவற்றில் தற்போது 'விக்ரம்' படம் தமிழகத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட தியேட்டர்களிலும், 'டான்' படம் 100 தியேட்டர்களிலும், 'நெஞ்சுக்கு நீதி' படம் 65 தியேட்டர்களிலும் ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள 1000 தியேட்டர்களில் பாதிக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட்ட படங்களே ஓடிக் கொண்டிருக்கின்றன. மற்ற தியேட்டர்களில்தான் வேறு நிறுவனங்களின் படங்கள் ஓடுகின்றன.
ரெட் ஜெயன்ட் நிறுவனம் தங்களது படங்களை வாங்கி வெளியிட்டால் தியேட்டர்கள் கிடைப்பது எளிது என நினைத்து சில நிறுவனங்கள் அவர்களை அணுகி படங்களை வெளியிடுங்கள் எனக் கேட்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், ரெட் ஜெயன்ட் நிறுவனம் முக்கியமான படங்களை மட்டுமே, வசூலைத் தரும் என்ற நம்பிக்கையுள்ள சில முன்னணி நடிகர்களின் படங்களை மட்டுமே வாங்கி வெளியிட விரும்புவதாகச் சொல்கிறார்கள்.
அதே சமயம், ஆளும் கட்சியின் வாரிசு நடத்தும் நிறுவனம் இப்படி ஒரு தொழிலை ஆக்கிரமிப்பு செய்வது சரியல்ல என்ற எதிர்மறை கருத்துக்களும் திரையுலகில் அதிகம் இருக்கிறது.
1187 days ago
1187 days ago
1187 days ago