நான் கோமாளி அல்ல, ஏமாளி : கூல் சுரேஷ் கண்ணீர்
ஹரி உத்ரா இயக்கத்தில் தருண் விஜய், சாயாதேவி நடிக்கும் மாஸ்டர் பிளான் படத்தில் கூல் சுரேஷ் நடிக்கிறார். எப்போதும் கலகலப்பாக, காமெடியாக பேசுபவர் இந்த படத் தொடக்க விழாவில் கண்ணீர் விட்டார். அவர் பேசுகையில் 'நானும் இந்த பட இயக்குனரும் பல ஆண்டுகால நண்பர்கள், அடிக்கடி பேசிக்கொள்வோம். நான் வளர்ச்சி அடைய வேண்டும் என்று நினைப்பவர். அதனால் நீங்க என்ன சம்பளம் கொடுத்தாலும், என் கேரக்டர் கொடுத்தாலும் நான் இந்த படத்தில் நடிக்கிறேன் என்றேன்.
சினிமாவில் என்னை பப்ளிசிட்டிக்காக பலர் பயன்படுத்துகிறார்கள். ஆனால், ஹரி உத்ரா மாதிரியான சிலர் உங்ககிட்ட திறமை இருக்கிறது. நீங்க பெரிய ஆளாக வரணும் என்பார். நான் கோமாளி அல்ல, ஏமாளி(என்று சொல்லிவிட்டு அழுதார்). நான் அழுவது உங்களுக்கு காமெடியாக தெரியலாம். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, நடிகர் விஜய் அழுதார்கள். சோஷியல் மீடியாவில் எல்லாமே நாடகமாக பார்க்கப்படுகிறது. அடுத்தவர் வலியை புரிந்து கொள்ளுங்கள். நான் சிரித்துவிட்டு ஜாலியாக வருகிறேன். நான் குடும்பஸ்தன், என் குடும்பத்தில், எனக்கு என்ன பிரச்னை என்று எனக்குதான் தெரியும். நான் அழுதாலும் விமர்சனம் செய்கிறார்கள், ஒரு மனிதன் என்னதான் பண்ணுவான்'' என்று பீல் பண்ணினார்.