‛ஜென்டில்மேன் 2' இயக்குனர் அறிவிப்பு
ADDED : 1318 days ago
ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன், மதுபாலா நடிப்பில் வெற்றி பெற்ற படம் ‛ஜென்டில்மேன்'. கே.டி.குஞ்சுமோன் தயாரித்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க போவதாக சில மாதங்களுக்கு முன் குஞ்சுமோன் அறிவித்தார். நாயகியாக நயன்தாரா சக்ரவர்த்தி என்ற புதுமுகம் நடிப்பதாகவும் அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் இயக்குனர் பற்றிய அறிவிப்பு மட்டும் வெளிவராமல் இருந்தது. தற்போது கோகுல் கிருஷ்ணா என்பவர் இதன் இயக்குனராக அறிவிக்கப்பட்டுள்ளார். இயக்குனர் கிருஷ்ணாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் சில ஆண்டுகளுக்கு முன் நானி நடிப்பில் வெளியான ‛ஆஹா கல்யாணம்' என்ற படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.