மேலும் செய்திகள்
சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி'
1185 days ago
மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம்
1185 days ago
தமிழ் சினிமா உலகில் கடந்த பல வருடங்களாக முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் கமல்ஹாசன். அவர் நடித்து வெளிவந்த பல படங்கள் மாபெரும் வெற்றியையும், வரவேற்பையும் பெற்றுள்ளன. ஆனால், இதுவரையிலும் அவர் தனக்குக் கிடைத்த வெற்றிகளைக் கொண்டாடியதை விட 'விக்ரம்' படத்தின் வெற்றியை சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்.
படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜுக்கு லெக்சஸ் கார், அவரது உதவி இயக்குனர்கள் 13 பேருக்கு அபாச்சி பைக், படத்தின் கிளைமாக்சில் ஒரே ஒரு காட்சியில் நடித்த சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் என பரிசுகளை அள்ளிக் கொடுத்து வருகிறார்.
ஆனால், படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து படத்தின் வெற்றிக்கும் வரவேற்புக்கும் உறுதுணையாக இருந்த விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோருக்கு கமல்ஹாசன் பரிசு ஏதும் தர மாட்டாரா என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும், படத்திற்கு இசையமைத்த அனிருத்திற்கும் பரிசு கிடையாதா என்ற கேள்வியும் எழுகிறது.
கமல்ஹாசன் இப்படி பரிசுகளை அள்ளித் தருவது இன்னொரு பக்கம் சில பல சர்ச்சைகளையும் ஏற்படுத்தி உள்ளது. விஜய் நடித்து வெளிவந்த 'பீஸ்ட்' படத்தின் வெற்றிக்காக விஜய் விருந்து மட்டும் வைத்தார். ஆனால், படத்தின் இயக்குனர் நெல்சனுக்கு ஏன் எந்தப் பரிசும் தரவில்லை என பலர் கிண்டலடித்து வருகிறார்கள்.
ஒரு காலத்தில் அஜித் அவருடைய படங்கள் வெற்றி பெறும் போது அப்பட இயக்குனர்களுக்கு கார் பரிசளிப்பார். அதன்பின் அவரும் அதை நிறுத்திவிட்டார். தற்போது கமல்ஹாசன் இப்படி பரிசளித்துள்ளதால் இனி விஜய், அஜித், ரஜினிகாந்த் ஆகியோரும் படம் வெற்றி பெறும் போது இயக்குனர்களுக்கும், உதவி இயக்குனர்களுக்கும் என்ன பரிசளிப்பார்கள் என்ற கேள்வி தானாக எழும்.
1185 days ago
1185 days ago