பொன்னியின் செல்வன் படத்தில் ஷாலினி நடித்துள்ளாரா?
ADDED : 1257 days ago
மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் என்ற சரித்திர படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், திரிஷா, பிரபு, சரத்குமார், ஜெயராம், பார்த்திபன், பிரகாஷ்ராஜ் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளார்கள். இந்நிலையில் இப்படத்தில் ஷாலினி அஜித்தும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து இருப்பதாகவும், அந்த தகவலை மணிரத்னம் ரகசியமாக வைத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் தற்போது அந்த செய்திக்கு அஜித் தரப்பு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. பொன்னியின் செல்வன் படத்தில் ஷாலினி அஜித் நடிப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. அது முற்றிலும் தவறான தகவல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கடந்த பல மாதங்களாக வெளியாகி வந்த இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.