இரவின் நிழல் - அடுத்த பாடல் நாளை வெளியாகிறது
ADDED : 1252 days ago
ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட பார்த்திபனின் இரவின் நிழல் படத்தின் இறுதிகட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகின. இந்த நிலையில் இரவின் நிழல் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலை ஜூன் 16ம் தேதி நாளை மாலை 6 மணிக்கு நடிகரும், சட்டசபை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார் . இதை பார்த்திபன் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பின் கீழ் பகுதியில், இப்படிக்கு திரைப்பட முன்னேற்ற கழக தொண்டர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதாவது திரைப்பட முன்னேற்ற கழக என்ற வார்த்தையில் முதல் எழுத்தை ஹெலைட்டாக திமுக என குறிப்பிட்டு விளம்பரம் செய்துள்ளார்.