தனது 67வது படத்தில் கேங்ஸ்டராக உருவெடுக்கும் விஜய்
ADDED : 1471 days ago
பீஸ்ட் படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கும் தனது 66வது படத்தில் தற்போது நடித்து வருகிறார் விஜய். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். தெலுங்கு சினிமாவில் விஜய் அறிமுகம் ஆகும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் அவரது பிறந்த நாளில் வெளியாக உள்ளது. மேலும் தற்போது விக்ரம் படத்தை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய்யின் 67வது படத்தை இயக்கப் போகிறார்.
இது குறித்த தகவல்கள் ஏற்கனவே வெளியாகி வரும் நிலையில், தற்போது இந்த படத்தில் விஜய் கேங்க்ஸ்டர் வேடத்தில் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் நடிக்க போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. பான் இந்தியா படமாக உருவாகும் இப்படத்தில் தெலுங்கு, மலையாள சினிமாவைச் சார்ந்த பிரபல நடிகர்களும் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளார்கள்.