மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
1174 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
1174 days ago
சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று பல சீரியல்களில் நடித்து வருபவர் ஸ்ரீநிதி. வலிமை படத்திற்கு விமர்சனம் செய்ததால் ரசிகர்கள் பலரும் ஸ்ரீநிதியை திட்டித்தீர்த்தனர். அதன்பிறகு அடிக்கடி பல சர்ச்சையான கருத்துகளை கூறி வந்த ஸ்ரீநிதி நடிகர் சிம்பு தன்னை காதலிப்பதாக கூறி, சிம்பு வீட்டின் முன் போராட்டம் நடத்தி சர்ச்சைகளை கிளப்பினார். அதுமட்டுமில்லாமல் நடிகை நக்ஷத்திராவின் காதலரால் நக்ஷத்திராவிற்கு ஆபத்து என்று கூறியும், சித்ராவை நினைவுப்படுத்தியும் பேசியிருந்தது சமூக ஊடங்கங்களில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு நக்ஷத்திராவும் அவரது காதலரும் தனித்தனியே விளக்கமளித்திருந்தனர். இதனைத்தொடர்ந்து ஸ்ரீநிதியின் அம்மாவும் அவளது நடவடிக்கை சரியில்லை என ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சென்னையின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள சிகிச்சை மையத்தில் ஸ்ரீநிதி அனுமதிக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. புழல் பகுதியில் அமைந்துள்ள அந்த மருத்துவமனையில் ஸ்ரீநிதிக்கு கவுன்சிலிங் மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிய வருகிறது.
1174 days ago
1174 days ago