மேலும் செய்திகள்
சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி'
1169 days ago
மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம்
1169 days ago
கோடைகால விடுமுறையை தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ஜீ தமிழ் சேனல் புத்தம் புதிய படங்களை ஒளிபரப்பி வந்தது. இந்த வரிசையில் நாளை( 26ம் தேதி) மாலை 5 மணிக்கு ராதே ஷ்யாம் படத்தை ஒளிபரப்புகிறது.
பாகுபலி 2, சாஹோ படங்களை தொடர்ந்து மிகவும் எதிர்பார்ப்புடன் வெளியான படம் இது. இதில் பிரபாசுடன், பூஜா ஹெக்டே, சத்யராஜ், ஜெகபதி பாபு, கிருஷ்ணம் ராஜூ, பாக்யஸ்ரீ, பிரியதர்ஷினி உள்பட பலர் நடித்திருந்தார்கள். சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பான் இண்டியா படமாக உருவாகி இருந்தது.
தெலுங்கு, இந்தியில் தயாராகி இருந்த படம், தென்னிந்தியாவின் அனைத்து மொழிகளிலும் கடந்த மார்ச் 11ம் தேதி வெளிவந்தது. ஆனால் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதன்பிறகு ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. இப்போது டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
இதைத்தொடர்ந்து அன்று இரவு 8 மணிக்கு கோலிவுட் மேன்ஷனின் வேடிக்கையான எபிசோடுடன் பார்வையாளர்களை விருந்தளிக்கும் விதமாக யானை படத்தில் நடித்த அருண் விஜய், பிரியா பவானி சங்கர் மற்றும் ராமச்சந்திர ராஜூ ஆகியோர் படம் பற்றிய பகிர்ந்து கொள்ளும் நிகழ்வும் கலகலப்பாக நடக்கிறது.
1169 days ago
1169 days ago