அட்லியின் 'ஜவான்' படத்தை பற்றி மனம் திறந்த ஷாருக்கான்
ADDED : 1247 days ago
விஜய்யின் தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை தொடர்ந்து அட்லி தற்போது இயக்கும் பாலிவுட் திரைப்படம் 'ஜவான்'. இந்த படத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கிறார். ஷாருக்கானின் மனைவி தயாரிக்கும் இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த படம் குறித்து சமீபத்தில் பேசிய ஷாருக்கான், இதுவரை ஜவான் போன்று கதைக்களம் உள்ள படங்களில் நடித்ததில்லை. அட்லியின் முந்தைய மாஸ் ஹிட் படங்கள் போன்று, இந்த படத்திலும் அட்லியுடனான கெமிஸ்ரி சிறப்பாக உள்ளது' என கூறியுள்ளார் .